திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சோழிய வோளாளர்களின் குலதெய்வமாக விளங்கும் திரவுபதையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கஜ பூஜையும், அசுவமேத பூஜையும் நடந்தது. நேற்று காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடந்தது. காலை 10 மணியளவில் கோவில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து கருவறையில் ஸ்வாமிகளுக்கு அபிஷேகமும், தீபாரனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். தகட்ர் ஞானசேகர சிவாச்சாரியார், தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து அம்மன் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் வீதியுலா காட்சி நடந்தது. முன்னதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில பொது செயலாளர் மைதீன் கோவிந்தராஜன் கோவில் நுழைவாயிலை திறந்து வைத்து விழா ஏற்பாடுகளை சோழியவேளாளர் சங்கத்தினரும், அண்டர்காடு கிராம வாசிகளும், திருப்பணி குழுவினரும் செய்திருந்தனர்.