வீரவநல்லூர் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :5184 days ago
வீரவநல்லூர் : வீரவநல்லூர் செண்பகவல்லி அம்பாள் சமேத விக்கிரமபாண்டீஸ்வரர் கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. வீரவநல்லூர் செண்பகவல்லி அம்பாள் சமேத விக்கிரமபாண்டீஸ்வரர் கோயிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை முன்னிட்டு இந்த ஆண்டு முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. காலையில் மங்கள இசை, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து தேவார இன்னிசை, சுவாமி அம்பாள் வீதிஉலா, மகா அபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. மாலை சமய சொற்பொழிவு, மாணவ, மாணவிகளுக்கு சிவபுராணம் பரிசளிப்பு விழா, சிறப்பு தீபாராதனை, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வருஷாபிஷேக விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.