உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

சேத்தியாத்தோப்பு:  சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் செடல் திருவிழாவையொட்டி, 108   பால்குடம் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு  அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. 20ம் தேதி கொடியேற்று விழா உற்சவமும் தொடர்ந்து உற்சவதாரர்கள் விழா நடந்தது. 7ம் நாளான நேற்று  மழவராயநல்லூர் கிராம பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் குளத்தங்கரையில் 108 பெண்கள் பால்குடம் ஏந்தி  ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான பூஜைகளை கோவில்  அர்ச்சகர் ரவி ஐயர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !