உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பின்னை வாழியம்மன் கோவிலில் 29ம் தேதி செடல் உற்சவம்

பின்னை வாழியம்மன் கோவிலில் 29ம் தேதி செடல் உற்சவம்

புதுச்சத்திரம்: சாமியார்பேட்டை பின்னை வாழியம்மன் கோவிலில் 17ம் ஆண்டு செடல் உற்சவம் வரும் 29ம் தேதி நடக்கிறது. கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழச்சி துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா  நடக்கிறது. 28ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் வ ரும் 29ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணிக்கு செடல்  உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !