உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் 31ல் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் 31ல் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: தாராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், வரும், 31ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில் உள்ளது, திரவுபதி அம்மன் கோவில். கடந்த, 22ம் தேதி, தீமிதி திருவிழா துவங்கியது. அன்றைய தினம், கொடியேற்றம் நிகழ்ச்சியும், பின், ஒவ்வொரு நாளும், திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், நஞ்சுக்குழி யாகம், அரக்குமா கோட்டை ஆகியவை நடந்தன. இன்று, அர்ச்சுனன் தபசு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நாளான வரும், 31ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !