கந்தன் கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை
ADDED :3402 days ago
திருத்தணி: சத்திய சாட்சி கந்தன் கோவிலில், நாளை, ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. திருத்தணி அடுத்த, அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவிலில், இன்று, ஆடிப்பரணியும், நாளை, ஆடிக்கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று, காலை, 7:30 மணிக்கு, மூலவருக்கு மஹா அபிஷேகம்; காலை, 10:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, வளர்புரம் கிருபானந்த வாரியார் குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும், மாலையில் வல்லக்கோட்டை பக்தஜன சபை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை, காலை, 10:15 மணிக்கு, முருகன் வெள்ளி வேல் விமானத்தில் வீதியுலா, மாலை, 4:30 மணிக்கு வீரமணி ராஜூ குழுவினரின் பக்திப் பாடல்கள் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர்.