இளங்காளி அம்மன் கோவிலில் பூமிதி திருவிழா
ADDED :3402 days ago
திருவள்ளூர்: பெரியகுப்பம், காவாக்கரை பகுதியில் உள்ள இளங்காளி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு, பூமிதி திருவிழா, வரும், 31ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, வரும், 29ம் தேதி காலை, 8:00 மணிக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்தலும், மாலை, 6:00 மணிக்கு சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெறும். பின், மறுநாள், 30ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வரதராஜ நகர் விநாயகர் கோவிலிலிருந்து, பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பின், காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும். அதன்பின், 31ம் தேதி காலை, 11:30 மணிக்கு அம்மனுக்கு கூழ் படைத்து அபிஷேகமும், மாலை, 6:30 மணிக்கு, பூமிதி வைபவமும், இரவு, 8:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் இளங்காளி அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.