உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டிப்பட்டு கோவிலில் சாகை வார்த்தல் விழா

செட்டிப்பட்டு கோவிலில் சாகை வார்த்தல் விழா

திருக்கனுார்:செட்டிப்பட்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, அம்மனுக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்காரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல், கூனிச்சம்பட்டில் கிராமத்தில் அமைந்துள்ள செங்ககேணி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !