உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித் திருக்கல்யாண திருவிழா: ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏறியது

ஆடித் திருக்கல்யாண திருவிழா: ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏறியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியதுராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க விழா கொடியை கோயில் குருக்கள் ஏற்றினர். பின் அலங்கார கோலத்தில் காட்சியளித்த அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், கக்காரின், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை யான ஆக. 2ல் ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தல், ஆக.4ல் ஆடித் தேரோட்டம், ஆக. 7ல் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !