உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் பால்குடம் அபிஷேகம்

தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் பால்குடம் அபிஷேகம்

பண்ருட்டி: பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, தேரோட்டம் மற்றும் செடல் விழா நாளை நடக்கிறது.   கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 21ம் தேதி முதல் தினமும் இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா  நடக்கிறது. நேற்று காலை 8:00 மணியளவில் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபி÷ ஷகம் நடந்தது.  நாளை (29ம் தேதி) காலை 7:00 மணிக்குமேல் கெடிலம் நதிக்கரையில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக வருகிறது. காலை 9:00  மணிக்கு மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை  4:30 மணிக்கு  திருத்தேர் வீதியுலாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், வரும்  5ம் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !