வேதகிரீஸ்வரர் ஆடிப்பூர உற்சவம் உற்சாக துவக்கம்
ADDED :3403 days ago
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று ஆடிப்பூர உற்சவம் துவங்கியது. இக்கோவிலில் வீற்றுள்ள திரிபுரசுந்தரி அம்மனுக்கு, 10 நாள் நடைபெறும் ஆடிப்பூர உற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 5:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அம்பாள், விநாயகர் ஆகியோர், காலை மற்றும் மாலை வேளைகளில், வீதியுலா சென்றனர். உற்சவ நாட்கள் வரை, தினம், இரு வேளைகளிலும், அவர்கள் வீதியுலா செல்வர். நாளை காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி சேவை; சங்குதீர்த்த புஷ்கர மேளா நாளில் (ஆக. 2ம் தேதி), காலை, 5:00 மணிக்கு, அம்பாள் தேரில் வீதியுலா; ஆகஸ்ட் 6ம் தேதி இரவு, அம்பாளிற்கு முழு அபிஷேகம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா என, முக்கிய உற்சவங்கள் நடைபெறும்.