புரட்டாசி பிறப்பு சர்ச்சையால் பக்தர்கள் கோயிலுக்கு படையெடுப்பு!
ADDED :5133 days ago
திருப்பரங்குன்றம் : "புரட்டாசி பிறந்த நாள் சரியில்லை என கிளம்பிய புரளியால், திருப்பரங்குன்றத்தில் நேற்று மகன்களுடன் பெற்றோர் விநாயகர் கோயில்களில் குவிந்தனர். திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், "புரட்டாசி பிறந்த நேரம், நாள் சரியில்லாததால் ஒரு மகன் வைத்துள்ளவர்களுக்கு ஆகாது என புரளி கிளம்பியது. ""இதை நிவர்த்தி செய்ய மகனுடன், விநாயகர் கோயிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைத்து, திரும்பி பார்க்காமல் வீடு செல்ல வேண்டும், எனவும் பரப்பினர். இதனால் ஒரு மகன் வைத்துள்ள பெற்றோர், விநாயகர் கோயில்களில் திரண்டு சிதறு தேங்காய் உடைத்தனர். கோயில்களில் கூட்டம் அலைமோதியதுடன், தேங்காய் விலையும் திடீரென உயர்ந்தது. வெளியூரில் வேலை பார்க்கும் மகனையும், வீட்டுக்கு வரவழைத்து பல பெற்றோர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.