தூய வியாகுல அன்னை தேர்பவனி!
ADDED :5233 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் தூய வியாகுல அன்னை ஆலய விழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. இங்கு, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடு நடந்தது. முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலியுடன் தேர்பவனி விழா துவங்கியது. மதுரை புனித பேதுரு குருத்துவ கல்லூரி பேராசிரியர் ஆனந்தம் சிறப்பு திருப்பலி நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை திருவீதி உலா வந்தார். ஒக்கூர் புதூர் பங்கு தந்தைகள் ஜோசப், சந்தியாகு ஆகியோர் திருவிழாக்களை நடத்தினர். பங்கு இறை மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.