ஆடிக் கிருத்திகை: முருகனுக்கு பாலாபிஷேகம்
ADDED :3403 days ago
கடம்பத்துார்: கடம்பத்துார், கடம்பவன முருகன் கோவிலில், நேற்று, ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பாலாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது, கடம்பவன முருகன் கோவில். இங்கு, ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று காலை, ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ள சூரிய அம்மன் கோவிலிருந்து, 175 பக்தர்களுடன், பால்குட ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோவிலை அடைந்தது. தொடர்ந்து, கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடந்தது. பின், மாலை, கடம்பவன முருகன் ஒய்யாலி சேவையும் நடந்தது. இதில், கடம்பத்துார், ஸ்ரீதேவிக்குப்பம், வெண்மனம்புதுார், கசவநல்லாத்துார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.