உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் நடந்த ஆடிவெள்ளி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடிமாத வெள்ளி, அம்மன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 19ம் தேதி ஆடிமாத பவுர்ணமியும், ஆடிமாதத்தின் முதல் வெள்ளியான, ஜூலை 22ம் தேதி திருமஞ்சனம், உச்சிகால பூஜை நடந்தது. மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று காலை, 11:00 மணிக்கு திருமஞ்சனம், உச்சிக்கால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தன. விழாவில், செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தன. ஆக., 2ம் தேதி, காலை, 9:00 மணிக்கு சர்வ ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகமும், காலை, 11:00 மணிக்கு ேஷாடச அபிேஷகம், பகல் 12:00 மணிக்கு மகாதீபாராதனையும் நடக்கிறது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், உடுமலை காமாட்சி அம்மன் கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. முத்தையா பிள்ளை லே அவுட் சித்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !