இன்னாசியார் ஆலய விழா துவங்கியது
ADDED :3401 days ago
விருதுநகர்: விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலையில் நடந்த இவ்விழாவில் மதுரை உயர் மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் ஆரோக்கியம், செயலாளர் ஏஞ்சல் ராஜ் துாய இன்னாசியார் திரு உருவம் பொறித்த கொடியினை ஏற்றினர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. இதில் பாதிரியார் ஞானப்பிரகாசம், துணை பாதிரியார் தாமஸ் வெனிஸ் உட்பட ஏராளாமானோர் பங்கேற்றனர். 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினசரி மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,6 மாலை 6 மணிக்கு இன்னாசியார் திரு உருவம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் மறை வட்ட அதிபர் பாதிரியார் ஞானபிரகாசம், துணை பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.