பின்னைவாழியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED :3511 days ago
புதுச்சத்திரம்: சாமியார்பேட்டை பின்னைவாழியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழச்சியுடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 28ம் தேதி காலை பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் 29ம் தேதி நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை செடல் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது.