உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பவனேஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி விழா

கடம்பவனேஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.  அதனையொட்டி காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம்,  ருத்திர ேஹாமம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சிறப்பு அ பிஷேகம், மகா தீபாராதணை நடக்கிறது. கடலுார்: குரு பெயர்ச்சியையொட்டி நாளை கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள்  நடக்கிறது. அதனையொட்டி காலை 8:30 மணிக்கு தட்சணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு கலசங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடக்கிறது.  தொடர்ந்து பரிகார யாகம் நடக்கிறது. அதில் அந்தந்த நட்சத்திரங்களுக்கு உரிய வேத, மூல மற்றும் மாலா மந்திரங்களை கூறி பூஜை நடைபெறும்.  தொடர்ந்து காலை 9:30 மணிக்கு புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்து தட்சணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !