உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்குணம் மாரியம்மன் கோவில் விழா நடத்துவதற்கு திடீர் தடை!

நெற்குணம் மாரியம்மன் கோவில் விழா நடத்துவதற்கு திடீர் தடை!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த நெற்குணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு, அதிகாரிகள்  தடைவிதித்துள்ளனர்.  திருக்கோவிலுார் அடுத்த நெற்குணம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்  திருவிழாவின்போது அதே பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால், திருவிழா  நிறுத்தப்பட்டு, கோவில் பூட்டப்பட்டது.   இந்த ஆண்டு ஆடிமாதம் எப்படியாவது திருவிழாவை நடத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில்,  இளைஞர் அமைப்பினர் சார்பில் ஊரில்  சமாதான கூட்டம் நடத்தி,  வருவாய்த்துறை‚ காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கோரினார்கள்.  இந்நிலையில் இளைஞர் அமைப்பினர்  விழா நடத்துவதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் பழனி மற்றும் போலீசார் விழா நடத்த  தடை வித்தனர்.  மேலும் கோவில் ஏற்கனவே பூட்டப்பட்ட நிலையே தொடரவும் உத்தரவிட்டனர். இதனால் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை  துவங்கிய இளைஞர் அமைப்பினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !