வீரஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி பூஜை
ADDED :3402 days ago
ஓமலூர்: ஓமலூர் அருகே, காடையாம்பட்டியில் உள்ள காரியசித்தி வீரஆஞ்சநேயர் கோவிலில், இன்று குருபெயர்ச்சி யாகபூஜை நடக்கிறது. காலை, 9 மணி, 24வது நிமிடத்தில், குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, பொன்னர் கூடல் காடையாம்பட்டி காரியசித்தி வீரஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், அதேநேரத்தில், விநாயகர் வழிபாடு, குருபகவான் கலச ஸ்தாபனம், காயத்ரி மந்திர ஜபம் ?ஹாமம், விசேஷ திரவ்யாஹூதி நடக்கிறது. தொடர்ந்து, 11 மணிக்கு, மங்கள மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 12.00 மணிக்கு, குரு பகவானுக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடக்கும்.