உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காம வேலவன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கதிர்காம வேலவன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நெய்வேலி: நெய்வேலி கதிர்காம வேலவன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையையொட்டி, முரு கனின் முகவரி என்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் (பொறுப்பு) முத்து தலைமை தாங்கினார். நகர  நிர்வாக பொது மேலாளர் கார்த்திகேயன், முதன்மை மேலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். சிவத்தொண்டர் நளினி வரவேற்றார்.  கலைமாமணி தேச மங்கையர்க்கரசி முருகனின் முகவரி என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவாற்றினார், தொடர்ந்து திருவிளக்கு பூஜை,  சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடந்தது. கடலுார்: சங்கர பக்த ஜன சபாவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சங்கர பக்த ஜன சபாவில் ஆடி வெள்ளியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சபாவின் உப தலைவர் திருமலை, செயலர் ரமேஷ், பொருளாளர் ராஜா, மகளிரணி கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !