உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வழிபாடு!

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வழிபாடு!

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளதால் நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.  நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நவபாஷாணத்தில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடற்கரை முன்பு மரக்கட்டைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் மூலம் பக்தர்கள் நெரிசல் இன்றி கடலுக்குள் சென்று புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.  இந்து அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. அறநிலைய துறை பரமக்குடி உதவி ஆணையர் ராமசாமி, தக்கார் இளங்கோ ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர். ராமநாதபுரம் உதவி எஸ்.பி., சர்வேஸ்ராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !