உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

கடலுார் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.  சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு குரு நேற்று  இடம் பெயர்ந்தார். இதனையொட்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7:30 மணிக்கு  பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், 8:00 மணிக்கு சங்கல்பம் நடந்தது.  தொடர்ந்து, கலச பூஜை, ஹோமம், தட்சணாமூர்த்தி, குரு வுக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலை வலம் வந்து தட்சணாமூர்த்தி, குருவுக்கு அபிஷேகம்  நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லிக்குப்பம்: எய்தனுாரில் பத்மதளநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், யாகம், தீபாராதனை நடந்தது. குருவாகிய  தட்சணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரமணர் அன்னதான குழு சார்பில் கந்தசாமி அன்னதானம் வழங்கினார்.  நெல்லிக்குப்பம் பூலோகநாதர், கைலாசநாதர், வரசித்தி விநாயகர், திருக்கண்டேஸ்வரம் நடபாதேஸ்வரர் மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் திரு மானிக்குழி வாமனபுரீஸ்வரர் வெள்ளபாக்கம் சிவலோகநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பரிகார ஹோமம் நடந்தது.  பரிகார ராசிக்காரர்கள் நெய் தீபம் ஏற்றியும், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

சேத்தியாத்தோப்பு: எறும்பூர் கல்யாணசுந்தரி சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் யாகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தெற்கு நோக்கி ÷ யாக நிலையில் அமர்ந்த குரு பகவானுக்கு 16 வகை திரவியங்களான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் உள்ளூர் மற்றும்  வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள வடிவுடையம்மன் கோவில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருபகவானுக்கு சிற ப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சென்னிநத்தம் கிளாங்காடு சாலையில் உள்ள பிடாரி அம்மன் கோவில் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நட்சத்திரம் ராசி  பரிகார சங்கல்பம், வேதிகா பூஜை நடந்தது. தொடர்ந்து குரு பரிகார யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

சிதம்பரம்: அனந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு அபி÷ ஷகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு லட்சார்ச்சனை சிறப்பு வழிப்பாடு  நடந்தது.

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சுவாமிக்கு காலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.  தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி அர்ச்சனை செய்து, வழிபட்டனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு  வழிபாடு நடந்தது. தொரவளூர் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் குருபகவானுக்கு சங்கல்பம், கலச ஆவாஹனம், ஜபம்  ஆகிய புனஸ்காரங்களுடன் குரு பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, பரிகார பூஜை நடந்தது.

மங்கலம்பேட்டை: மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சன்னதியில், காலை 9:30 மணிக்கு  சிறப்பு யாகம், பகல் 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை,6:00 மணியளவில் யாக பூஜை,  9:15 மணியளவில் குரு பகவான் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !