உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செபஸ்தியார் திருவிழாவில் 2000 கோழி, 800 ஆடுகளுடன் விடிய விடிய விருந்து!

செபஸ்தியார் திருவிழாவில் 2000 கோழி, 800 ஆடுகளுடன் விடிய விடிய விருந்து!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செபஸ்தியார் திருவிழாவில் 2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து, அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.திண்டுக்கல் முத்தழகுபட்டி செபஸ்தியார் திருவிழா கடந்த ஜூலை 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பாதிரியார் சேவியர் ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

2000 கோழி, 800 ஆடுகள் 2000 கோழிகள், 800 ஆடுகள், 130 மூடை அரிசியை அனைத்து மதத்தினரும் காணிக்கையாக செலுத்தினர்.மேலும் மாடு மற்றும் பொருட்களும் வழங்கப்பட்டன. இவை உடனடியாக ஏலம் விடப்பட்டு, அந்த தொகை ஆலய நிதியில் சேர்க்கப்பட்டது. விடிய விடிய விருந்துசெபஸ்தியார் ஆலயத்தில் நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் பிஷப் தாமஸ்பால்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்பு காணிக்கையாக பெற்ற ஆடு, கோழிகளை அறுத்து சமைத்த சமபந்தி விருந்து துவங்கியது. நேற்று விடிய, விடிய நடந்த இவ்விருந்து இன்று பகல் 1 மணி வரை நடைபெறும். திண்டுக்கல் பகுதியிலேயே நடந்த பெரிய அசைவ விருந்தான இதில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பலஆயிரம் பேர் பங்கேற்றனர். இன்று பகல் 2 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !