பண்டரிநாதன் கோவில் ஆக., 6ல் லட்சார்ச்சனை
ADDED :3398 days ago
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், லட்சார்ச்சனை திருவிழா, வரும், 6ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், சதர்சன ஹோமம் நடக்கிறது. காலை, 7.30 மணி முதல் பண்டரிநாதன சுவாமிக்கு லட்சார்ச்னை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தி செய்து, மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.