பையூர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3398 days ago
உளுந்துார்பேட்டை: பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் 108 சங்காபிஷேகம், தீபாரதனை நடந்தது. திருவெண்ணைநல்லுார் அடுத்த பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஞானகுருதட்சணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், குரு பெயர்ச்சி விழாவையொட்டி, சுவாமிக்கு மகா தீபாரதனை வழிபாடும், கலச அபிஷேகமும், 108 சங்காபிஷேகம் நடந்தது. பின் கணபதி ேஹாமம், பரிகார ேஹாமங்கள் நடந்தன. பின்னர், ஞானகுருதட்சணாமூர்த்தி சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.