உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோயிலில் ஆடி அமாவாசை, குருபெயர்ச்சிவிழா

மலைக்கோயிலில் ஆடி அமாவாசை, குருபெயர்ச்சிவிழா

பழநி: ஆடி அமாவாசையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியாவுடையார் கோயில் சண்முநதிக்கரையில் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் செய்து முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதைப்போல பாலாறு-பொருந்தலாறு அணை வீர ஆஞ்சநேயர்கோயில், கண்ணாடிபெருமாள்கோயில், பாலசமுத்திரம் கரடிக்கூட்டம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பழநியை சுற்றியுள்ள கிராமத்தினர் அம்மன், கருப்பணசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

குருபெயர்ச்சிவிழா: குருபெயர்ச்சியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேகம், வெள்ளிகவசக அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நவக்கிரக சன்னதியில் வியாழபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, சுண்டல்மாலை படைத்து, தீபம்ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரில் சவுராஷ்டிரா ஸ்ரீ வித்யாதர்ம சபைக்கு பாத்தியமான தட்ஷிணா மூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. கோயிலில் நேற்று முன்தினம் இரவு மகா கணபதி,பாலமுருகன், தட்ஷிணாமூர்த்தி, தேவதா அனுக்கை, பூர்வாங்கம் பூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சுத்தி புண்யாஹூ வாசனம், வேதிகை அர்ச்சனை, கலச ஸ்தாபனம், கலசபூஜை, வேதபாராயணம், தீபாராதனையும் நடந்தது. காலை 9.27 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, சதுர்வேதபாராயணம், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சவுராஷ்டிரா வித்யா தர்ம சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். திண்டுக்கல், ஆவிளிபட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் ஆலய அறக்கட்டளை பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி மஹா யாகம், கோ பூஜை நடந்தது. 108 மூலிகை, 108 தீர்த்தம், 108 சமித்து குச்சிகளை கொண்டு யாக பூஜை செய்யப்பட்டது. பூஜாரிகள் பேரமைப்பு தலைவர் உதயகுமார் சிவாச்சாரியார் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !