ராமேஸ்வரத்தில் தங்க குதிரை வாகனத்தில் அம்மன் உலா!
ADDED :3398 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 8ம்நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.