உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மன் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவ தேரோட்டம் நேற்று நடந் தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அ பிஷேக ஆராதனை, விநாயகர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன் சுவாமிகள் பல்லக்கு, கிளி, பூத, யானை வாகனங்களில் வீதியுலா  நடக்கிறது. அதில், நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் சிறப்பு  அலங்காரத்தில் அம்மன் தேரோட்டம் நடந்தது.  அதில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  இன்று (5ம்  தேதி) காலை சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி, இரவு விருத்தாம்பிகை அம்மன் ஸ்படிக பல்லக்கில் ஊர்வலம்  நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில் விருத்தாம்பிகை அம்மன் ஆடிப்பூரத் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !