உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்துாரில் ஆடிப்பூரம்: குவிந்த செவ்வாடை பக்தர்கள்!

மேல்மருவத்துாரில் ஆடிப்பூரம்: குவிந்த செவ்வாடை பக்தர்கள்!

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார்  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், கஞ்சி வார்த்தல், பாலாபிஷேகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 45வது  ஆடிப்பூர விழா, 3ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன்  வழிபாடு நடைபெற்றது. கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்கினார். காலை, 7:45  மணிக்கு, பங்காரு அடிகளார் வீட்டிலிருந்து, லட்சுமி பங்காரு அடிகளார் எடுத்து வந்த, தாய் வீட்டு கஞ்சியை ஆதிபராசக்தி அம்மனுக்கு படைத்தனர்.  பாலாபிஷேகத்தை, பகல், 12:00 மணிக்கு, பங்காரு அடிகளார் துவக்கினார். பின், நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம்  செய்தனர். நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் பங்கேற்றார். லண்டன் செவ்வாடை பக்தர்கள் நீர் ÷ மார் வழங்கினர். இன்று மாலை வரை, பக்தர்கள் தொடர்ந்து பாலாபிஷேகம் செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !