உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மீனாட்சி கோயிலில் முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் வைர கிரீடம் அணிந்து, தங்கக்கிளியுடன் சர்வ அலங்காரத்துடன் புறப்பாடாகி, அம்மன் சன்னதி கொடிமரம் முன் காலை 10:10 மணிக்கு எழுந்தருளினார். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் மணிக்கு துவங்கின.விவேக் பட்டர் கொடிமர பூஜை நடத்தினார். காலை 10:50 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை முழங்க கொடிமரத்தில் சிவலிங்கம், காளை வாகன சின்னம் பொறித்த வெண் கொடியை ஏற்றி பாலாபிஷேகம் நடத்தினர். தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின் மீனாட்சி அம்மன் புறப்பட்டு கொலுமண்டபம் சேர்ந்தார். விழா ஆக., 13ல் நிறைவடைகிறது. தினமும் காலை, மாலையில் ஆடி வீதியில் பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருள்வார். ஏழாம் நாள் (ஆக.,10) விழாவில் திருவீதி உலா முடிந்த பின் உற்சவ சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !