உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்புரம் மகாலெட்சுமி கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்!

மன்னார்புரம் மகாலெட்சுமி கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்!

திருச்சி : திருச்சி மாவட்டம், மன்னார்புரம், நால்ரோடு சிக்னல் அருகில், மகாலெட்சுமி தாயார் கோயிலில் 4ம் ஆண்டு வளையல் அலங்கார வைபவ திருவிழா ஆடிப்பூரமான இன்று(ஆக. 5) கோலாகலமாக நடந்தது.

திருச்சி மாநகரில் மன்னார்புரத்தில் மகாலெட்சுமி தாயாருக்கு  தனிகோயில் அமைந்துள்ளது. இங்கு நான்கு கரங்களுடன் (இரண்டு கரங்களில் தாமரை மலர்களுடனும் வேறு இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் வடக்கு நோக்கி அருள்புரிகிறார்.  இங்கு லட்சுமி தாயாருடன் வரதராஜப் பெருமாளும் அருள்பாலிப்பது சிறப்பு. . 5.8.2016 ஆடி-3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருக்கோவிலில் மகாலெட்சுமி தாயாருக்கு வளையல்களால் அலங்காரம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும், லெட்சுமி கடாஷமும் கிட்டும். கர்ப்பிணி பெண்களுக்கும், சுமங்கலி பெண்ளுக்கும் திருமாங்கல்ய பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சியும், கன்னி பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !