வைகுண்ட பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று துவக்கம்
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த, அத்திப்பட்டு பத்மாவதி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலில், 11ம் ஆண்டு பவித்ர மகா உற்சவம் இன்று துவங்குகிறது. விழாவையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசன சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், மாலை 5 மணிக்கு ராமானுஜர் வைபவம் சொற்பொழிவும் நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, 18 அத்தியாயங்கள் பகவத்கீதை பாராயணமும், மாலை 5 மணிக்கு பஜனை கோலாட்டமும் நடைபெறும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசன சேவையும், 7 மணிக்கு ஸ்ரீவாரி உற்சவ மூர்த்தி அலங்கார திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு உற்சவர் பெருமாள் மாட வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீர்த்த பிரசாத வினியோகமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கேசவன் தலைமையில், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.