உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனகநாச்சியம்மன் கோவிலில் ரூ.1.59 லட்சம் காணிக்கை

கனகநாச்சியம்மன் கோவிலில் ரூ.1.59 லட்சம் காணிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக, ஆந்திர மாநில எல்லையான புல்லூரில், கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஆந்திர அரசு எடுத்துக் கொண்ட பின், கடந்த 2ம் தேதி ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதையொட்டி, கோவிலில், நான்கு உண்டியல்கள் வைக்கப்பட்டன. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், ஒரு லட்சத்து, 59,025 ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்தது. இதில், திருவிழாவுக்கு, ஒரு லட்சத்து, 26,830 ரூபாய் செலவானதாகவும், கையிருப்பில், 32,195 ரூபாய் உள்ளதாகவும் ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !