உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏமகண்டனூர் ஆட்சியம்மன் கோவிலில் நவசண்டி யாகம்

ஏமகண்டனூர் ஆட்சியம்மன் கோவிலில் நவசண்டி யாகம்

கொடுமுடி: கொடுமுடி ஆட்சியம்மன் கோவிலில், நவசண்டி யாகம் நேற்று தொடங்கியது.உலக நலன் கருதி, கொடுமுடி அருகில் உள்ள ஏமகண்டனூர் ஆட்சியம்மன் கோவிலில், நேற்று தொடங்கிய நவ சண்டி யாகம், இன்றுடன் முடிகிறது. கும்பகோணத்துக்கு அடுத்தபடியாக எமதர்மராஜா, சித்ரகுப்த, விசித்ரகுப்த சமேதராய் அமைந்த கோவில் இதுதான். ஆயுள் அபிவிருத்தி அடைய, மரண பயம் நீங்குவதற்காக யாகம் நடக்கிறது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு தொடங்கிய யாகம், இரவு, 9 மணி வரை நடந்தது. இன்று, காலை, 7 மணி முதல் மதியம், 2.15 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !