உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கோயில்களில்விளக்கு பூஜை

ராமநாதபுரம் கோயில்களில்விளக்கு பூஜை

ராமநாதபுரம்: ஆடி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ராமநாதபுரம் வீரமாகாளியம்மன் கோயில், வெட்டுடையாள் காளியம்மன், கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சுவாமி அம்மன் உருவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெளிப்பட்டணம் முத்தாலம்மன் கோயிலில் விசேஷ அலங்காரம், மல்லம்மாள் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !