கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா
ADDED :3353 days ago
கம்மாபுரம்: கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா நடந்தது. கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடந்தது. தொடர்ந்து 5ம் தேதி காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 11:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடலணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 6ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தலுடன் விழா நிறைவு பெற்றது.