உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகர் இல்லாததால் காளஹஸ்தியில் கோ பூஜை நிறுத்தம்

அர்ச்சகர் இல்லாததால் காளஹஸ்தியில் கோ பூஜை நிறுத்தம்

திருப்பதி: அர்ச்சகர் இல்லாததால், காளஹஸ்தியில் கோ பூஜை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர் கோவில், தினமும் அதிகாலை, கோ பூஜையுடன் திறக்கப்படும். பக்தர்கள் கோ பூஜை செய்வதற்காக, கோவில் வளாகத்தில், ஸ்ரீகோகுலம் என்ற இடத்தை, கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. அங்கு பூஜை செய்ய, இரண்டு பசுக்களை நிறுத்தி, அர்ச்சகரும் நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு காலை, 8:00- முதல், 12:00 மணி வரை; மாலை, 4:00 முதல், -6:00 வரை, பக்தர்கள் கோ பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், பசுக்களை பூஜை செய்து வந்த அர்ச்சகர், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், கோ பூஜை செய்ய முடியவில்லை. இதனால், அதிகாலை தவிர, மற்ற நேரங்களில், கோபூஜை செய்ய முடியாததால், பக்தர்கள் அதிருப்திஅடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !