உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா

சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா

சென்னை: பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவில் மகாலட்சுமியை வழிபடுவதற்கு என ஆகம முறைப்படி அமைக்கப்பட்டது. இத்தலத்திற்கு ’ஓம்கார ஷேத்திரம்’ என்ற பெயர் உண்டு. ஆவணி மாதம், முதல் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு நாள் கொண்டாடப்படுகிறது. சில நேரங்களில், ஆடி மாதத்திலும் வரும். இந்தாண்டு ஆடி மாதம் 12ம் தேதியன்று, வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. அனைத்து சன்னிதிகளுக்கும் நோன்பு சரடு சார்த்தி, அலங்கார சேவை, சிறப்பு அர்ச்சனை நடத்தப்படுகிறது. மாலை 4:00 மணி முதல் நோன்பு சரடுகள் பெண்களுக்கு, மங்கலப் பொருட்களுடன் பிரசாதமாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !