உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடி தர்காவினுள் மாரியம்மன் முளைப்பாரி ஊர்வலம்!

ஏர்வாடி தர்காவினுள் மாரியம்மன் முளைப்பாரி ஊர்வலம்!

கீழக்கரை: ஏர்வாடியில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயிலின் 22 வது முளைப்பாரி விழா நடந்தது. நேற்று இரவு 7 மணியளவில் ஏர்வாடி தர்காவினுள், அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஏந்தியவாறு ஏராளமான ஆண்களும், பெண்களும் தர்காவினை மூன்று முறை வலம் வந்தனர். 

தர்காவின் முன்புறம் பாரிகளை அடுக்கி, கும்மியடிக்கும் நிகழ்ச்சியும், பின்னர் முளைப்பாரியின் இலைகளை மகான் பாதுஷா நாயகத்தின் மக்பராவின் அருகில் கொண்டு செல்லப்பட்டு, உலக நன்மைக்கான துஆ ஒதப்பட்டது. மாரியம்மன் கோயில் விழாக்குழுவினர்களை, ஏர்வாடி ஹக்தார் சபை நிர்வாக கமிட்டியினர் கவுரவித்தனர். சின்னஏர்வாடி கடற்கரையில் பாரியினை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் ஆடி உற்சவ முளைப்பாரி ஊர்வலம் தர்காவினுள் சென்று வருவது வழக்கமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !