விழுப்புரம் லக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம்
விழுப்புரம்: பொய்கைப்பாக்கம் ஸ்ரீலக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் அடுத்த மாதம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இத்தலத்தில் 15.9.2016 வியாழக்கிழமை காலை 10.45க்கு மேல் விசேஷண ஆராதனைகளும், பன்னிரெண்டு ஆழ்வார்கள் பிரதிஷ்டையும், (செப்டம்பர் 15, 16, 17, 18 தேதிகளில்) திருபவித்ரோத்ஸவமும் நடக்க விருக்கிறது. 15.9.2016, வியாழக்கிழமை காலை ஆழ்வார்கள் ப்ரதிஷ்டைக்கான யாகசாலை தொடக்கமும், மறுநாள் 16.9.2016 வெள்ளிக்கிழமை காலை பன்னிரெண்டு ஆழ்வார்கள் ப்ரதிஷ்டையும், திருபவித்ரோத்ஸவ யாகசாலை ஹோமங்கள் தொடங்கி 17.9.2016 சனிக்கிழமையும் தொடர்ந்து 18.9.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாஹுதியுடன் நிறைவடைய உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
15.9.2016 (வியாழக்கிழமை)- யாகசாலை தொடக்கம்
16.9.2016 (வெள்ளிக்கிழமை)
மாலை: அங்குரார்ப்பணம், மஹாஸங்கல்பம், அநுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனை, கும்பஸ்தானம், ரக்ஷாபந்தனம், பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளுதல், வேத, ப்ரபந்த தொடக்கம், பவித்ர பூஜை திருமஞ்ஜனம், மஹாகும்ப ஸ்தாபனம், பூர்ண ஆஹுதி, அதிவாஸ பவித்ரம் சாற்றுதல், சாற்றுமுறை, தீர்த்த ப்ரஸாதம் விநியோகம்.
17.9.2016 (சனிக்கிழமை)
காலை: திருமஞ்ஜனம், த்வார பூஜை, மண்டல பூஜை, பிம்ப பூஜை, ஹோமம், பூர்ண ஆஹுதி, சாற்றுமுறை, ப்ரஸாத விநியோகம்.
மாலை: சதுஷ்ஸ்தான பூஜை, அர்ச்சனை, ஹோமம், பூர்ண ஆஹுதி, சாற்றுமுறை, ப்ரஸாத விநியோகம்.
18.9.2016 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: சதுஷ்ஸ்தான பூஜை, அர்ச்சனை, ஹோமம், பூர்ண ஆஹுதி, விசேஷ ஹோமங்கள், சாந்தி ஹோமம், ப்ராயசித்த ஹோமம், மஹா பூர்ணாஹுதி, பெருமாளுக்கு மண்டல ப்ரஸாதம் ஸமர்ப்பித்தல், பவித்ர விஸர்ஜனம், ஆசார்ய மரியாதை, ஸ்தாபன திருமஞ்ஜனம், யாத்ரா தானம், கும்ப புறப்பாடு, கருவறையில் கும்பத்துடன் பெருமாள் எழுந்தருளுதல், மஹாகும்ப ப்ரோக்ஷணம், திருவாராதனம், நிவேதனம், வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்தம், ப்ரஸாத விநியோகம்.
தொடர்பு கொள்ள: ஸ்ரீலக்ஷ்மீநாராயண வரதராஜ பெருமாள் கைங்கர்ய டிரஸ்ட்
போன்: 044-4357 2006, 93810 36170, 95439 17592