விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா
ADDED :3353 days ago
விழுப்புரம்: விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் 93ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி, துவங்கியது.
இதனையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு அன்னம், பூதம், நாகம், சிம்மம், யானை, ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் இரவில் வீதியுலா நடந்தது. (ஆக.,12 வெள்ளிக்கிழமை) ரத உற்சவத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் எழுந்தருளச் செய்தனர். மதியம் 2:00 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. மாலை தொட்டில் செடலும், அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. ஏற்பாடுகளை, விழா குழுவைச் சேர்ந்த அற்புதவேல், முத்துகுமரன், பச்சையப்பன், முருகையன், பாரதிகுமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.