பாகூர் கன்னியக்கோவிலில் தீ மிதி திருவிழா
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா ((ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது.
பாகூர் அடுத்துள்ள கன்னியக்கோவிலில், மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோவில் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழான தீமிதி திருவிழா (ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது. இதனையொட்டி, (ஆக.,12) வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. விழாவில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பத்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணவாளன், தெற்கு மாவட்ட காங்., செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி தினகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.