உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமலை ரங்கநாதர் கோவிலில் 1008 கலச பூஜை

பாலமலை ரங்கநாதர் கோவிலில் 1008 கலச பூஜை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், 1008 கலச பூஜை நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்தர் வேள்வியாக கடந்த, 48 நாட்களாக சிறப்பு பூஜைகள், யாகம் நடந்தன. இதையொட்டி, 1008 கலச பூஜை நடந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலச நீரால் பாலமலை ரங்கநாதருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பூதேவி, ஸ்ரீதேவி சமேத அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவீதி உலாவும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !