உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம்

நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம்

பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் மக்கள் அனைவரும் மனநிறைவு கொள்ளும் பெருநாள்.  ஐப்பசி மாதத்தில் உலக மக்கள் கொண்டாடப்படும் இத்திருநாள் தீமையை கடுமையாகச் செய்து மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை தேவர்கள் அழித்து மக்களும், தேவர்களும் மகிழ்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் பல நம்பிக்கை கதைகள் உண்டு. இருப்பினும், இதனை கதையாகச் சொல்லி கொண்டிருக்காமல் நமக்குள் இருக்கும் நரகாசுரனாகிய கொலை, களவு. பஞ்சபாதகம், பொய், தீண்டாமை, புலால் உணவு உண்ணாமை, மது பழக்கம் தவிரத்தல், உழைக்காமல் உண்பது, கணவனை அவமதிப்பது, மனைவியை கொடுமை செய்வது, பெற்றோர் சொல் மீறுதல், அதிக உறக்கம் இதுபோன்ற இன்னும் மனித வளர்ச்சிக்கு தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து, தீபாவளி நாளன்று அதிகாலை எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நம்மிடம் இருக்கும் இருள்களை நீக்கி, ஒளி ஏற்றி மன நிறைவுடன் வாழ இறைவனை வேண்டுவோம். தீபங்கள் ஏற்றும் தீபாவளி திருநாள்! பார் போற்றும் பண்டிகை திருநாள்! உறவுகளோடு உறவாடி மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !