உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதந்திர தினவிழா: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

சுதந்திர தினவிழா: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

திருத்தணி: வரும், 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முருகன் மற்றும் அதை துணை கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது.

இது குறித்து திருத்தணி முருகன் கோவிலின், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின், 70வது சுதந்திர தினவிழா, வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி, திருத்தணி முருகன் கோவில், அதன் துணை கோவில்களான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர், திருப்பாச்சூர் வாசீஸ்வரர், கரிம்பேடு நாதாதீஸ்வரர் மற்றும் பெரியநாகபூண்டி நாகேஸ்வரர் ஆகிய ஐந்து கோவில்களில், 15ம் தேதி காலை, 11:30 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை தரிசித்து, பொது விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !