படவேட்டம்மன் கோவிலில் 108 பால் குட திருவிழா
ADDED :3365 days ago
வேலுார்: வேலுார் அருகே, 100 ஆண்டுகள் பழமையான படவேட்டம்மன் கோவிலில், 108 பால் குட திருவிழா மற்றும் பக்தர்கள் பஸ், லாரிகளை முதுகில் அலகு குத்தி இழுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டையில், 100 ஆண்டுகள் பழமையான படவேட்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, நான்காவது ஆடி வெள்ளித் திருவிழா (ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது. விழாவையொட்டி, 108 பால் குட திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூங்கரகத்துடன் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்தனர். பின்னர், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், 20 பஸ், 10 மினி பஸ், 10 லாரி மற்றும் 10 கார்களை முதுகில் அலகு குத்தி இழுத்து, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.