உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்அருங்குணத்தில் கோவில் திருவிழா

மேல்அருங்குணத்தில் கோவில் திருவிழா

செஞ்சி: மேல்அருங்குணம் புத்துமாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.

செஞ்சி ஒன்றியம், மேல்அருங்குணம் ஐயனாரப்பன், பூரணி, பொற்கலை, புத்துமாரியம்மன், சப்த கன்னிகள், வீரன் சாமிக்கு மூன்றாம் ஆண்டு ஆடி திருவிழாவும், புத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழாவும் நடந்தது. இதை முன்னிட்டு விநாயகர் பூஜை, தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். ஊரணி பொங்கல், கும்ப படையல் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு பூக்குழி இறங்குதல், பூங்கரகம் மற்றும் சுவாமி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !