சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி அம்மனுக்கு 1,008 குடம் பால் அபிஷேகம்
ADDED :3368 days ago
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் (ஆக.,12) ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும் வேதநாயகி அம்மனுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம் மற்றும் லலிதா சகஸ்ர நாம யாகம் நடந்தது. காலை, 7.30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கிய லலிதா சகஸ்ர நாம யாகம் பகல், 12 மணி வரை நடந்தது. உலக நன்மை, மழை வளம், குழந்தைகளின் கல்வி மேன்மை பெறவும் இந்த யாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின், பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த, 1,008 பால் குடங்களைக் கொண்டு, வேதநாயகி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.