அவிநாசி கோவிலில் ஆடித்தபசு விழா
ADDED :3383 days ago
அவிநாசி: அவிநாசி கோவிலில், ஆடித்தபசு விழாவையொட்டி, சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலில், கருணாம்பிகை அம்மனுக்கு வலப்பாகம் கொடுத்த ஆடித்தபசு விழா நடைபெற்றது. ருத்ர ஜபம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்றைய தினம், உற்சவமூர்த்தி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.